Latestமலேசியா

உயிர் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் தீர்ந்தது; 200-ருக்கும்‌ மேற்பட்ட இந்திய மாணவர்கள் அர்வினுக்கு நன்றி

கோலாலம்பூர், அக்டோபர்-11, உள்நாட்டு உயர் கல்விக் கூடங்களில் மேற்கல்வியைத் தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு விடியல் பிறந்துள்ளது.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி முயற்சியில், அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

பல்கலைக்கழகக் கட்டணம், கற்றல் கற்பித்தல் மற்றும் இலக்கயியல் உபகரங்கணங்கள் வடிவில் அவ்வுதவிகளை அவர் வழங்கியுள்ளார்.

ஏழ்மை கல்விக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகக் கூறிய அர்விந்த், அக்கொள்கையின் அடிப்படையில் தம்மால் ஆன உதவிகளை நமது மாணவ மாணவியருக்கு செய்து வருவதாக சொன்னார்.

தமது அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு உதவிகளை ஒப்படைத்த நிகழ்வில் அவர் பேசினார்.

தங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு உதவிக் கரம் நீட்டிய அர்விந்த் அப்பளசாமிக்கு, உதவிப் பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!