
மலாக்கா, ஜனவரி 13 – மலாக்கா மாநில நிதி அலுவலரின் சொத்தாக இருந்த 17 தங்கக் கட்டிகள் உள்ளிட்ட நகைகளை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான ஆடவன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
குற்றப்பத்திரிகைப்படி, 2024 ஜூன் முதல் 2025 டிசம்பர் வரை, Bukit Peringgit-கில் உள்ள மாநில நிதி அலுவலருக்கான அரசு இல்லத்தில் இருந்து, 17 தங்கக் கட்டிகள், தங்க வளையல், வைர மோதிரங்கள் உள்ளிட்ட 254,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கானது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
மேலும், திருடிய நகைகளை விற்பனை செய்ததற்காக அந்த ஆடவனுக்கு அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே வழக்கில், நகைகளை பெற்றுக்கொண்ட வியாபாரி குற்றத்தை மறுத்துள்ளதால் அவருக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் நிர்ணயிக்கப்பட்டு, மாதம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



