Latestமலேசியா

தவணை காலம் முடியும் வரை அன்வாரே பிரதமராக நீடிக்கட்டும் – சரவாக்கின் அபாங் ஜோஹரி

சரவாக், ஜன 14 – நாடாளுமன்ற தவணை காலம் முடியும் வரை, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமே பிரதமர் பதவியில் நீடிக்கட்டும் என GPS கட்சியின் தலைவர் அபாங் ஜோஹரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் அன்வாரை ஆதரிப்பது முக்கியம். இதன் வழி நாட்டை ஆளுவதில் மத்திய அரசு கவனம் செலுத்த முடியும் என்று அபாங் ஜோஹரி கூறியிருக்கின்றார்.

“பிரதமர் ஏற்கனவே உள்ளதால், அவரே இறுதி வரை நீடிக்கட்டும். இடைக்காலத்தில் பிரதமர்களை மாற்றினால் பாதியில் நிலைத்தன்மையற்ற சூழல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

“சரவாக்கில் உள்ள நாங்கள் மலேசியா வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அண்டை நாடுகளைப் பாருங்கள், இந்தோனேசியா எவ்வளவோ வளர்ச்சியடைந்து விட்டது. ஆனால் நமது அரசியல்வாதிகள் இன்னுமும் அரசியல் விளையாட்டில் கவனம் செலுத்துகின்றனர். சரவாக்கில் நாங்கள் அரசியல் நிலத்தன்மையை ஆதரிக்கிறோம்” என மேலும் அவர் விளக்கமளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!