Latestமலேசியா

சிலாங்கூரிலிருந்து மலாக்காவுக்கு நடந்தே சென்று மனுராம் சாதனை

கோலாலம்பூர், நவ 17 – சிலாங்கூரில் டமன்சாரா உத்தாமாவிலுள்ள தமது வீட்டிலிருந்து மலாக்கா A ‘Fomasa கோட்டைக்கு நடந்தே சென்ற மனுராம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. தமது பயணத்தை தொடங்கியது முதல் டுவிட்டரில் அவரது பதிவை இதுவரை 21 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 159 கிலோமீட்டர் தூரத்தை கொண்ட இந்த சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது குறித்து மனுராம் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அடுத்த பினாங்கு அல்லது சிங்கப்பூருக்கும் தமது நடைப்பயணத்தை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். வேலை தேடிக்கொண்டிருப்பதால் இதுவரை 300 இடங்களுக்கு மேல் சென்றுள்ளதால் சொந்தமாக எனது திருப்திக்காக எதாவது ஒரு சாதனையை செய்வதற்கு முடிவு செய்தேன். அப்படித்தான் மலாக்காவுக்கு நடந்து செல்வது என முடிவு செய்தேன். இதற்கு முன்னதாக நான் எந்தவொரு பயிற்சியையும் செய்யவில்லை என மனுராம் தெரிவித்தார்.

48 மணி நேரத்திற்குள் மலாக்காவுக்கு நடந்து செல்வது என முடிவு செய்தேன். டீ சட்டை, ஜீன்ஸ்சுடன் , மடிக்கணினி பேக்குடன் தமது மலாக்கா பயணத்தை தொடர்ந்தாக அவர் கூறினார். நவம்பர் 2ஆம் தேதி காலை மணி 6.37 அளவில் எனது நடைப்பயணத்தை தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதி காலை 8.44 அளவில் மலாக்கா சென்றடைந்தபோது மொத்தம் 170 மணி நேரம் ஏழு நிமிடம் பிடித்தது. இந்த பயணத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் பிடித்தது. தமது நடைப்பயணத்தின்போது அது குறித்த விவரங்களை டுவிட்டர் மூலம் தமது அணுக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பதிவிட்டதாக அவர் சொன்னார். இறுதி நாளன்று நண்பகல் 1 மணி தொடங்கி 53 கிலோமீட்ட பயணத்தை மறுநாளன்று காலை 8 மணியளவில் முடித்ததாக மனுராம் தெரிவித்தார். தூக்கம் வந்தால் பஸ் நிலையத்தில் படுத்து தூங்குவேன். இந்த பயணத்தின்போது சில வேளை அரைமணிநேரம் முதல் ஒரு மணிநேரம்வரை ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!