
ரவாங், ஜனவரி-17 – தமிழ்த் தொண்டரும் சமூக ஆர்வலருமான ஆறுமுகம் என்ற கந்தன் 88 வயதில் காலமானார்.
ஜனவரி 14-ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் இவர் மரணமடைந்தார்.
1937-ல் பிறந்த இவர், தமிழ்மொழி, கல்வி, பண்பாட்டுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
தமிழாசிரியர்களின் பிரச்னைகளை வெளிப்படுத்தும் ஆய்வுகளுக்கும், இளைஞர்களைத் தமிழில் ஈடுபடுத்தும் நிகழ்வுகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்தார்.
குறிப்பாக, தமிழாசிரியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரி சு.வை. லிங்கம், ஆறுமுகம் போன்றோருடன் இணைந்து 1964-ஆம் ஆண்டில் உண்ணாவிரதம் இருந்தவர்.
நேற்று சிலாங்கூர் ரவாங்கில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
தமிழ்ப் பணிக்காக வாழ்ந்த அவரது பயணம், தமிழ்மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.



