
புத்ராஜெயா, செப்டம்பர் 3 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) திட்டமிட்டப்படி பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏரோட்ரெயின் தற்போது 24 மணி நேர சேவையை வழங்கி வருவதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 முதல் 31 ஆம் தேதி வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நேரத்தில், பயணிகளுக்காக ஷட்டில் பேருந்து சேவைகள் வழங்கப்படப்பட்டன.
KLIA-வின் முக்கிய இணைப்பாக இருக்கும் ஏரோட்ரெயின் சேவை பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
MAHB தற்போது மலேசியாவில் 39 விமான நிலையங்களையும் துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.