
அம்பாங், அக்டோபர்-11,
அம்பாங்கின் Ukay Perdana அடுக்குமாடி பகுதியில் புலி உறுமல் சத்தம் கேட்டு குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் புலி உறுமுவதுப் போல ஒலி கேட்டதாகப் பலர் கூறினர்.
உடனடியாக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காங்கள் துறையான PERHILITAN சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியது.
ஆனால், இதுவரை புலியின் தடங்கள் அல்லது சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும், அதிகாரிகள் அப்பகுதியை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
வட்டார மக்கள் நிதானமாக இருக்கவும், தவறான தகவல்களை பரப்பாதிருக்கவும், ஏதேனும் விலங்கு சத்தம் வந்தால் அல்லது அசாதாரண நிகழ்வை கவனித்தால் உடனே தங்களைத் தொடர்பு கொள்ளவும் PERHILITAN கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மர்ம உறுமல் ஒலி சமூக வலைதளங்களில் பரவி, ஆச்சரியத்தையும் சிலரிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியது.