Latestமலேசியா

மாணவியை கத்தியால் குத்தும் புகைப்படத்தை நீக்கும்படி MCMC வலியுறுத்த

கோலாலம்பூர், அக்டோபர்- 15,

Bandar utama வில் நேற்று மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட மரணம் தொடர்பான புகைப்படம் அல்லது காணொளியை உடனடியாக நீக்கும்படி MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அத்தகைய படங்கள் அல்லது பதிவுகளைப் பரப்புவது குடும்பத்தின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறுவது மட்டுமல்லாமல், போலீஸ் விசாரணையையும் பாதிக்கும். எனவே அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டுமென மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் வலியுறுத்தியது.

பாதிக்கப்பட்டவர், பிற மாணவர்கள் அல்லது சம்பவம் நடந்த இடம் போன்ற புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உட்பட எந்தவொரு உள்ளடக்கத்தையும் பகிரவோ, மறுபதிவு செய்யவோ அல்லது பதிவேற்றவோ வேண்டாம் என்று MCMC பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. அத்தகைய உள்ளடக்கம் பதிவேற்றப்பட்டிருந்தால், அதை உடனடியாக நீக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்
233 ஆவது விதியின்படி இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பரப்பும் நபர்கள் மீது அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பண்டார் உத்தாமாவில் இடைநிலைப் பள்ளியில் நேற்று காலை 14 வயது மாணவனால் கத்தியால் குத்தப்பட்டதில் 16 வயது மாணவி இறந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!