Latestமலேசியா

140 அடி பத்து மலை முருகன் சிலையின் கீழ் தகவல் பலகை திறப்பு, பத்து மலை முருகன் கவசம் வெளியிடு

பத்து மலை, ஜனவரி-2 – பத்து மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள 140 அடி உயர முருகன் சிலையின் 20-ஆம் ஆண்டு விழா, பக்தர்களின் எதிர்பார்ப்பை விட நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.

பக்தி அம்சங்களோடு, இவ்விழாவில், முருகன் வரலாற்றையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் விளக்கும் சிறப்பு பக்திப் பயண வீடியோவும் வெளியிடப்பட்டது.

சிறப்பம்சமாக, சிலையின் இடப்புறத்தில் புதிய தகவல் பலகைத் திறந்து வைக்கப்பட்டது.

இதில், வருகையாளர்கள் மற்றும் சுற்றுப் பயணிகளின் வசதிக்காக, முருகன் சிலை பற்றிய விவரங்களும், முருகப் பெருமானின் ஆன்மீக அர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன.

புது முயற்சியாக, பத்து மலை முருகன் கவசம் teamdsk8877 என்ற YouTube பக்கத்தில் வெளியிடப்பட்டது.

பக்தர்கள் 20 ரிங்கிட்டுக்கு CD வாங்கி, கவசம் மற்றும் பிற பக்திப் பாடல்களையும் கேட்கலாம்.

இரவில், தேவஸ்தானம் ஏற்பாடு செய்த வாணவேடிக்கைக் காட்சி, சிலையை ஒளிரச் செய்து, பக்தர்களை மெய்மறக்கச் செய்தது.

இந்தியா மற்றும் உள்ளூர் பாடகர்கள், பாரம்பரிய நடனக் கலைஞர்கள் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சிகள் விழாவை இன்னும் சிறப்பாக்கின.

இவ்வாறு, 140 அடி உயர பத்து மலை முருகன் சிலையின் 20-ஆண்டு விழா, பக்தி, கலாச்சாரம், மற்றும் பெருமையை ஒருங்கே கொண்டாடி, பக்தர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி வெகு விமரிசையாக நடந்தேறியது என்றால் அது மிகையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!