
பஞ்சாப், செப்டம்பர்-20,
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் (Ludhiana) அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலில் (Seattle) இருந்து 71 வயது இந்திய வம்சாவளி மூதாட்டி ரூபிந்தர் கவுர் பந்தர் (Rupinder Kaur Pandher), திருமணத்திற்காக இந்தியா வந்தபின் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் திருமணம் செய்யவிருந்தது – இங்கிலாந்தில் வசிக்கும் 75 வயது இந்திய வம்சாவளி முதியவர் சரண்ஜித் சிங் கிரேவால் (Charanjit Singh Grewal) ஆவார்.
வயது முதிர்ந்த இருவரும் இணையத் திருமண வலைத்தளத்தில் சந்தித்து பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் ஜூலை மாதமே நடந்தாலும், காணாமல் போனதாக அவரது சகோதரி அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்ட பிறகே விஷயம் வெளிச்சம் கண்டது.
போலீஸ் தகவலின் படி, கிரேவால் 50 லட்சம் ரூபாய் கொடுத்து சுக்ஜீத் சிங் சோனு (Sukhjeet Singh Sonu) என்பவரை கொலைக்கு கூலிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் போலீஸிடம் சிக்கிய சோனு, ரூபிந்தரை தனது வீட்டில் கொலைச் செய்து, உடலை கிடங்கில் எரித்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
ரூபிந்தர், இந்தியா வருவதற்கு முன்பே கிரேவாலுக்கு பெரும் பணத்தைப் பரிமாற்றம் செய்திருந்ததை, கொலைக்கான முக்கியக் காரணமாக போலீஸ் கருதுகிறது.
தற்போது எலும்புக்கூடு உட்பட மற்ற ஆதாரங்கள் தேடப்பட்டு வருகின்றன.
கிரேவாலை பிடிக்க தீவிர வேட்டை நடைபெற்று வருகிறது.