
கோலாலம்பூர், டிச 3- நாடு முழுவதிலும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த
4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 50 ரிங்கிட் , இடைநிலைப் பள்ளி தொழிற்கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயில்வோர் 100 ரிங்கிட்டிற்கான மடானி புத்தக வவுச்சர்களை மாற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3. 2 மில்லியனை எட்டியுள்ளது. 31 ஆம்தேதி முதல் வவுச்சர்களை கொடுத்து புத்தகங்களை வாங்குவதற்கு தகுதி பெற்ற மொத்தம் 3.5 மில்லியன் மாணவர்களில் அந்த எண்ணிக்கை 91 விழுக்காடை குறிக்கிறது.
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தகுதியான மாணவர்களில் 100 சதவீதம் பேர் இந்த MADANI வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்வார்கள் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் ( Fadhlina Sidek ) நம்பிக்கை தெரிவித்தார். வவுச்சரை பயன்படுத்தி புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கு இன்னும் 28 நாட்கள் உள்ளன. எனவே இந்த வசதியை 100 விழுக்காடு மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம். தற்போது வவுச்சர்களை மீட்டுக்கொண்ட மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 91 விழுக்காட்டை எட்டியுள்ளதாக பட்லினா கூறினார். ஆனால் சில மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் இது 100 விழுக்காடை அடைந்துள்ளது. .