
கோலாலம்பூர், பிப்ரவரி-22 – கோலாலம்பூர் தித்திவங்சா LRT நிலையத்தில் இன்று காலை ஓர் ஆடவர் தண்டவாளத்தில் இறந்துகிடந்தார்.
காலை 8.40 மணிக்கு அவசரத் தகவல் கிடைத்து, தித்திவங்சா மற்றும் செந்தூல் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
பிறகு தண்டவாளத்திலிருந்து சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
கண்பார்வையற்றவர் என நம்பப்படும் அந்த சீன ஆடவர் நிலைத் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்திருக்கக் கூடும்.
அதனை எதிரே வந்த இரயில் ஓட்டுநரும் கவனிக்காததால் இரயிலில் மோதி அவர் பலியானது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, கோலாலம்பூர் தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
எனினும் அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
இச்சம்பவத்தால் காலையில் PWTC, தித்திவங்சா, செந்தூல், செந்தூல் தீமோர் ஆகிய LRT நிலையங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பெர்னாமா தெரிவித்தது.