ரினி தோட்ட தமிழ்ப்பள்ளியில் 68வது சுதந்திர தின அணிவகுப்பு – இந்தியன் பைக்கர்ஸ் சிறப்பு பங்கேற்பு

ஜோகூர் பாரு, செப்டம்பர் 2 – 68 வது தேசிய தினத்தை முன்னிட்டு, ஸ்கூடாய் ரினி தோட்ட தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின அணிவகுப்பு மிக சிறப்பாக நடைபெற்றது.
மாணவ மணிகள், பாரம்பரிய உடைகளை அணிந்து, தேசியக் கொடிகளை அசைத்தபடி“மெர்டேக்கா! மெர்டேக்கா!” என முழக்கமிட்டபடி ‘இந்தியன் பைக்கர்ஸ்’ குழுவினருடன் இணைந்து பள்ளி சுற்றுவட்டார வசிப்பிடங்களைச் சுற்றி நடந்து வந்த காட்சி நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
பள்ளியின் தலைமையாசிரியை சு.தமிழ்ச்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றி, மாணவர்களிடையே தேசப்பற்றை ஊட்டும் விதமாக கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
மேலும் இந்தியன் பைக்கர்ஸ் குழுவினரும், பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் திரு. பிரகாஷ் மற்றும் நிர்வாகக் குழுவினரும் இணைந்து நிகழ்வைத் தொடக்கி வைத்து மாணவர்களோடு இணைந்து தேசப்பற்று பாடல்களைப் பாடி விழாவிற்கு மேலும் அழகு சேர்த்தனர்.
இறுதியாக, தலைமையாசிரியை அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த துணை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.