Latestமலேசியா

இரட்டைக் கோட்டை கடக்க முயன்றபோது விபரீதம்; ஒன்றோடொன்று மோதிக் கொள்வதிலிருந்து தப்பிய 3 வாகனங்கள்

பெனம்பாங், மார்ச் 17 – சாலை வளைவில் விரைவுப் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஆபத்தான முறையில் இரட்டைக் கோட்டை முந்திச் செல்ல முயன்றதால் ஒரு வாகனம் கிட்டத்தட்ட மோதும் சூழ்நிலைக்கு உள்ளானது.

தம்புனான்-பெனாம்பாங் ( Tambunan-Penampang) வழித்தடத்தில், கூர்மையான வளைவுக்கு சுமார் 300 மீட்டர் முன்பு மூன்று வாகனங்கள் முந்திச் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாதைக்குள் சென்றன.

சம்பவம் நடந்தபோது, ​​கெனிங்காவிலிருந்து கோத்தா கினபாலுவிற்கு (Keningau ke Kota Kinabalu) தனது குடும்பத்துடன் நோன்பு பெருநாளுக்கு தயாராகுவதற்கு பொருட்களை வாங்கச் சென்றதாக வைரல் வீடியோவின் உரிமையாளரான 27 வயதுடைய முகமட் பஹாடி ரெஜிஸ்லி  (Mohd Fahadi Registly) கூறினார்.

தம்புனானிலிருந்து கூர்மையான சந்திப்பிற்கு 300 மீட்டருக்குள், மூன்று வாகனங்கள் இரட்டைக் கோட்டில் குறுக்கே சென்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, தனது குடும்பத்துடன் இருந்ததால் மெதுவாக ஓட்டியதாகவும் இச்சம்பவம் குறித்து பெனம்பாங் ( Penampang ) மாவட்ட போலீஸ் தலைமையத்தில் புகார் செய்ததாகவும் அவர் கூறினார்.

கோத்தா கினபாலு – தம்புனான் -கெனிங்காவ் சாலையை அதிக வாகனங்கள் பயனப்டுத்தி வருகின்றன.

குறிப்பாக அதிகமான டிரெய்லர்கள் அந்த சாலையை பயன்படுத்தி வருவதால் போக்குவரத்தின் வேகம் குறைவதோடு, சில ஓட்டுநர்கள் பொறுமையிழந்து கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

சுமார் 30 வினாடிகள் நீடிக்கும் வைரலான வீடியோவில், மூன்று வாகனங்கள் இரட்டைக் கோடு வளைவில் டிரெய்லரை முந்திச் சென்று சாலை விதிகளை மீறுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!