Latestஉலகம்

தைவானின் அதிபராக வில்லியம் லாய் மூன்றாவது முறை தேர்வு; சீனா கோபம்

சீனா, ஜன 14 – தனி சுதந்திர நாடு ஆதரவாளரான வில்லியம் லாய், தைவானின் அதிபராக மூன்றாவது முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது சீனாவின் கோபத்தை தூண்டியுள்ளது.

வில்லியம் லாய்யின் DPP எனும் ஜனநாயக முன்னேற்ற கட்சி 40 விழுக்காடு வாக்குகளைப் பெற்று சீனாவிற்கு ஆதரவான KMT எனும் கோமிண்டாங் கட்சியையும் தைவான் மக்கள் கட்சியையும் தோற்கடித்துள்ளது.

தைவானை தங்களோடு மீண்டும் இணைத்துக் கொள்வதே தங்களது கொள்கை என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் வில்லியம் லாய்யின் வெற்றியை பெரிய அச்சுறுத்தலாக அது கருதுகிறது.

“போரா அமைதியா” எனும் பயத்தை தைவான் மக்கள் மத்தியில் விதைக்கச் செய்து தேர்தலில் தங்களுக்கு ஆதரவான கட்சியை வெற்றி பெறச் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததை அது ஏற்க முடியவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவோடு மீண்டும் இணைவதா அல்லது தனி சுதந்திர நாடாகா நிலைப்பதா பற்றி கருத்துரைக்காமல் சீனாவிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை தற்காப்பேன் என வெற்றிக்குப் பின்னர் வில்லியம் லாய் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!