
கோலாலம்பூர், மார்ச்-14- தைப்பூசக் காவடியாட்டத்தைக் கொச்சைப்படுத்திய சம்ரி வினோத் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ம.இ.கா வலியுறுத்தியுள்ளது.
‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் ஏரா எஃ.எம் வானொலிக்கு சற்றே பெரியத் தொகையாக 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதில் காட்டிய அதே கடுமையை அரசாங்கம் சம்ரி வினோத் விஷயத்திலும் காட்டும் என தாம் எதிர்பார்ப்பதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.
இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அதனைத் தெரிவித்தார்.
இந்துக்களை இழிவுப்படுத்தியதாகக் கூறி சம்ரி வினோத் மீது நாடு முழுவதும் சுமார் 900 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது