Latestமலேசியா

போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.

வழக்கறிஞர் M. விஸ்வநாதன் தலைமையில் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கோரிக்கை வலுயுறுத்தப்பட்டது.

ஒருவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் Lokapபில் மரணமடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது; அதுவும் தன் சகோதரர் சந்தேகத்தின் பேரில் தான் தடுத்து வைக்கப்பட்டார், குற்றம் சாட்டப்படவோ நிரூபிக்கப்படவோ இல்லை என, அவரின் தங்கை Irene Louis Ganaprakasam கூறினார்.

CCTV கேமரா பதிவைப் பார்க்கும் போது, தன் அண்ணனுக்கு நிகழ்ந்தவை குலை நடுங்க வைக்கும் அளவில் இருப்பதாக அவர் கடும் வேதனையுடன் கூறினார்.

இவ்வேளையில், ஐந்தாண்டுகள் ஆகி விட்ட நிலையில், தன் மகனின் மரணத்திற்கு நீதி கிடைத்தே ஆக வேண்டுமென, Jestusஸின் தந்தை A. ஞானபிரகாசம் கூறினார்.

ஒரு திருட்டுக் குற்றத்திற்காக கைதான Jestus கேவின், 2020 ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு போலீஸ் lokapபில் மரணமடைந்தார்.

மூச்சுத் திணறலுக்கு ஆளானதோடு, lokapபில் இருந்து வெளியே எடுக்கும் போது அவர் சுயநினைவின்றி இருந்தார்.

Jestusஸின் மரணத்திற்கு மற்றவர்களின் செயலே காரணம் என, கடந்த ஜூலை 31-ஆம் தேதி குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சந்தேக நபரின் நடவடிக்கை அசாதாரணமாக இருந்ததோடு, மனநிலையும் சீராக இல்லை; ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் மருத்துவமனைக்கும் கூட்டிச் செல்லாமல் போலீஸ் தவறிழைத்திருப்பதாக நீதிமன்றம் கூறியதும் குறிப்பிட்டத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!