Latestமலேசியா

கே.கே . மார்ட் புரக்கணிப்பை நிறுத்தும்படி ஙா கோர் மிங் விடுத்த அழைப்பை அக்மால் நிராகரித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 19 – Allah என்ற வார்த்தையைக் கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK Mart மன்னிப்பு கேட்டுக்கொண்ட போதிலும் அந்த நிறுவனத்திற்கு எதிரான தங்களது புறக்கணிப்பு தொடரும் என அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் Muhammad Akmal Saleh தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டதை போலீசார் நேற்று உறுதிப்படுத்தினர். எனினும் K.K Mart நிறுவனத்தை புறக்கணிக்கும் கோரிக்கை நிறுத்தும்படி DAP யின் Nga Kor Ming விடுத்த அழைப்பை அக்மால் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விவகாரத்தில் விடாப்பிடியாக Akmal இருந்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும் மற்றும் என்பதை Nga Kor Ming எச்சரித்திருக்கிறார்.

கே.கே Mart நிறுவனத்தை புறக்கணிக்கும் கோரிக்கையை நான் பின்வாங்கப்போவதில்ல. இது குறித்து தாம் அஞ்சவில்லை என்றும் Akmal கூறினார். இஸ்லாம், பூமிபுத்ரா மற்றும் மலாய் ஆட்சியாளர்களை பாதுகாப்பதே அம்னோவின் கொள்கையாகும், இது ஒருபோதும் மாறாது. அம்னோ இளைஞர்கள் இறக்கும்வரை வரை இந்த கொள்கையை பின்பற்றுவார்கள் என Akmal நேற்றிரவு தெரிவித்தார்.

தமது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறும் புறக்கணிப்பைத் தொடருமாறும் இன்று காலை அவர் வலியுறுத்தினார். உங்கள் நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம் என்று நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறீர்களோ, அவ்வளவு வலிமையான முஸ்லிம்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள் என தமது முகநூலில் Akmal பதிவிட்டுள்ளார்.

அம்னோ தொடர்ந்து மக்கள் ஆதரவை இழந்து வருவதைக் காண Akmal விரும்பவில்லை என்றால், அவர் முதலில் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும், நேர்மையான அறிவுரைகளை பணிவுடன் ஏற்க வேண்டும், அல்லது அம்னோவின் தேர்தல் தோல்விக்கு அவர் தான் காரணம் என்று நினைவுகூரப்படுவார் என்று Nga வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!