
பேராக், அக்டோபர் 6 – செலாமா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்வி, விழிப்புணர்வு, நன்னடத்தை, தலைமைத்துவ வழிகாட்டால் பயிலரங்கு சிறப்புடன் நடைபெற்றது.
படிநிலை 2 மாணவர்களுக்காக நடைபெற்ற இப்பயிலரங்கில், கல்வியின் தேவைகள், கட்டொழுங்கு, தலைமைத்துவப் பயிற்சி ஆகியவை குறித்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மாணவர்கள் கல்வி கேள்விகளில் கவனம் செலுத்துவதுடன் பண்பாடு, கட்டொழுங்கு, நற்பண்புகள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கோவி.சந்திரன் தெரிவித்தார்.
இப்பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தலைமை அமைப்பாளர் பாஸ்கரன், பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணதாசன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.