
புத்ராஜெயா, டிசம்பர்-31,
நாளைப் பிறக்கும் 2026 ஆங்கிலப் புத்தாண்டு இந்தியச் சமூகத்திற்கு வளம், நலன் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வருமென, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியா மடானி கொள்கையின் கீழ் அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்துமென, தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் கூறினார்.
சமூக-பொருளாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற துறைகளில் உயர் தாக்கம் கொண்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஒற்றுமை, சமத்துவம் மற்றும் மனிதநேயப் பண்புகள் அடிப்படையில், அனைத்து சமூகங்களும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.
2026-ஆம் ஆண்டு மலேசியாவை மேலும் வளமான, ஒற்றுமையான நாடாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ரமணன் கேட்டுக் கொண்டார்.



