
குவாலா பிலா, டிசம்பர் 31 – சிரம்பான் குவாலா பிலா சாலையின் 23 வது கிலோமீட்டரில், நேற்று இரவு நடந்த விபத்தில் 28 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து பெரோடுவா வீவா கார் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிளுக்கிடையே ஏற்பட்டதென்று குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Muhamad Mustafah Hussin தெரிவித்தார்.
சிரம்பான் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை சாலைக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தப்பட்ட அந்தக் கார் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துள்ள நிலையில், அந்நபர் போதைப்பொருள் உட்கொண்டதும் சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலீசார் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



