
சிரம்பான்,ஆகஸ்ட்-15- சிரம்பான் Bandar Ainsdaleலில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தியிருந்த தனது e-hailing வாடகை காரில் இருந்த பயணி அதனை ஓட்டிச் சென்றதால் 61 வயது கார் ஓட்டுநர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
நேற்று அதிகாலை மணி 3.30 அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள Sri Subangகிற்கு செல்ல வேண்டும் என 22 வயதுடைய பயணர் ஒருவர் கேட்டுக்கொண்டதால் தாமான் Bukit Jedட்டில் அப்பயணியை ஏற்றியுள்ளார்.
செல்லும் வழியில் பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு அதன் இயந்திரத்தை நிறுத்தாமலேயே ஓட்டுநர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின் கழிவறையிலிருந்து வெளியேறிபோது அதன் பயணியே அக்காரை கொள்ளையடித்து சென்றதை உணர்ந்து அந்த e-hailing ஓட்டுநர் இது குறித்து போலீசில் புகார் செய்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தவைர் துணை கமிஷனர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, Sri Subangகில் ஒருவனை கைது செய்த போலீசார், அங்கிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் அக்காரைக் கண்டுபிடித்ததாக முகமது ஹட்டா கூறினார்.
அந்த நபர் Toyota Vios காரை ஓட்டிச் சென்றதை ஒப்புக் கொண்டான். காரில் இருந்த GPS எனப்படும் புவி இருப்பிட சாதனம் மூலம் அவனது இருப்பிடத்தைக் கண்டறிந்து சந்தேக நபரைக் கைது செய்து மேலும் விசாரணைக்காக காரைக் கைப்பற்ற உதவியது.
அவன் இதற்கு முன் வீடு புகுந்து பல்வேறு திருட்டுச் குற்றங்களில் ஈடுபட்ட பின்னனியை கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.