
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இரு சோதனைகளில், சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், 29 வயதான ஒருவரை கைதுச் செய்தனர்.
ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று KL South பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி வரவேற்பறையில் அந்நபர் பிடிபட்டபோது, 741.5 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
பின்னர், அவரது வழிகாட்டுதலின்படி, செராஸ் தாமான் செகார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்கத்திலிருந்து 3 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 20.5 கிலோகிராம் மெத்தாம்பெட்டமின் (methamphetamine) கலந்த சீன தேயிலைப் பேக்கேட்டுகள் மீட்கப்பட்டன.
மொத்தம் 23.74 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது சுமார் 4.2 லட்சம் போதைப்பித்தர்களுக்குப் போதுமானது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து செயல்பட்டு வரும் இக்கும்பல், போதைப்பொருட்களை விநியோகிப்பதற்கு முன்பாக, கார்களை கையிருப்பு கூடமாக பயன்படுத்துவதாக போலீஸ் கூறியது.
அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, சந்தேக நபர், ஆகஸ்ட் 27 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.