Latestஉலகம்

88வது வயதில் போப் பிரான்சிஸ் மரணம் – வாட்டிக்கன் அறிவிப்பு

வார்டிகன் ,ஏப் 21 – கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் இன்று காலமானார். 88 வயதான போப்பாண்டவர் இன்று இத்தாலியில் உள்ளூர் நேரப்படி காலை மணி 7.35அளவில் இறந்தார் என Vatican அறிவித்தது.

லத்தின் அமெரிக்கா வட்டாரத்தைச் சேர்ந்த முதல் போப்பாண்டவர் என்ற பெருமையையும் போப் பிரான்சிஸ் பெற்றிருந்தார்.

நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் கடந்த மார்ச் 23 ம் தேதியன்று Vaticanனுக்கு அவர் திரும்பினார்.

நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்தை தெரிவித்த ஒரு நாளுக்குப்பின் அவர் காலமானார்.

அவரது மறைவைத் தொடர்ந்து புதிய போப்பாண்டவர் தேர்வு செய்யப்படுவார்.

போப்பாண்டவர் மறைவால் மிகவும் வேதனையடைந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது தொடர்ச்சியான புன்னகை மற்றும் எல்லையற்ற இரக்கம் ஆகியவற்றினால் பணிவு நிறைந்த மனிதராக விளங்கினார் என பிரான்ஸ் அதிபர் மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். உலகின் இதர தலைவர்களும் போப்பாண்டவர் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!