
நியூடெல்லி, செப்டம்பர் 15 – நியூடெல்லியில் காலை மணி 8.37க்கு, முதுகுவலி காரணமாக வேலைக்கு வர இயலாதென்று தனது மேலாளரிடம் குறுஞ்செய்தி அனுப்பிய 40 வயது மதிக்கத்தக்க இந்திய ஆடவர் அடுத்த 10 நிமிடங்களில் திடீர் இருதய நோயால் (cardiac arrest) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைப் ஏற்படுத்தியுள்ளது.
ஆறு ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அந்நபர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தவர் என்றும் புகை மற்றும் மதுவை முற்றிலும் தவிர்த்து வந்தவர் என்றும் அறியப்படுகின்றது.
அவருக்கு மனைவியும் ஒரு சிறிய குழந்தையும் உள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
இந்நிலையில் உயிரிழந்த ஆடவரின் குறுஞ்செய்திக்கு, அவரின் மேலாளர் “சரி, ஓய்வு எடு” என்ற பதிலை இறுதியாக அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலைத்தளத்தில் வைரலாகி வரம் இச்செய்தி இந்தியாவில் அதிகரித்து வரும் திடீர் இருதய மரணங்கள் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.