Latestமலேசியா

“சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்”: பாஸ் எம்.பியின் பேச்சுக்கு கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? ராயர் கேள்வி

கோலாலம்பூர், ஜனவரி-24-பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்” என மக்களவையில் பேசியிருப்பது குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள MIPP மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான MAP, உரிமை போன்றவற்றின் நிலைப்பாடு என்ன என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியர் சார்ந்த இம்மூன்று கட்சிகளும், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க அமைக்கப்பட் Ikatan Prihatin Rakyat எனும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பாசீர் மாஸ் எம்.பி Ahmad Fadhli bin Shaari புதன்கிழமை மக்களவையில் ஆற்றிய உரையை, இம்மூன்று கட்சியினரும் பார்த்தார்களா என ராயர் கேட்டார்.

பார்த்திருந்தால், “Rumah Ibadat Haram” என்ற சொல்லை Fadhli பயன்படுத்தியதை அவர்கள் ஏற்கிறார்களா என ராயர் சவால் விடுத்தார்.

இது குறித்து MIPP, MAP, உரிமைக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

இல்லையேல் இது எதிர்கட்சிகளின் இன்னோர் அரசியல் நாடகமாகவே விளங்கும் என ராயர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது உரையாற்றிய Fadhli Shaari, ஊரார் நிலத்தில் கட்டப்பட்டுள்ள ‘சட்டவிரோத வழிபாட்டு தலங்கள்’ குறித்து பேசினார்.

கோலாலம்பூரில் கடந்தாண்டு மட்டுமே அத்தகைய 118 சம்பவங்கள் பதிவானதாகவும், அமுலாக்க நடவடிக்கைகளின் தோல்வியை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

யாரையும் பெயர் குறிப்பிடா விட்டாலும், இது போன்ற ‘சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்’ எப்படியும் அரசாங்கம் கடைசியில் இறங்கி வந்து பதிய நிலத்தை கொடுத்து விடும் என்ற ‘எண்ணத்தில்’ இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

“முதலில் ஊரார் நிலத்தில் சட்டவிரோதமாக வழிபாட்டுத் தலத்தை கட்டுவது, பின்னர் உணர்ச்சியைக் காட்டி அரசாங்கத்தை அடிபணிய வைத்து புதிய நிலத்தைப் பெற்றுக் கொள்வது” அவர்களின் வாடிக்கையாகி விட்டதாக Fadhli கூறினார்.

இது அவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!