
சிக்காகோ, ஆகஸ்ட் 25 – அமெரிக்கா மேரிலாந்தில் சதையை உண்ணும் ‘New World Screwworm’ எனப்படும் புதிய தொற்று நோய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
CDC மற்றும் மேரிலாந்து சுகாதாரத் துறை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்தாலும், மாநில அரசு அதிகாரிகள் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘Screwworm’ எனப்படும் ஒட்டுண்ணி ஈக்கள் வெப்ப இரத்தமுள்ள விலங்குகளின் காயங்களில் முட்டையிட்டு அதன் குஞ்சுகள் வெளிவந்தவுடன் சதையைத் துளைத்து உண்ணுகின்றன என்று அறியப்படுகின்றது.
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கால்நடைகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கக்கூடும் என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தற்போது மாநில கால்நடை மருத்துவர்களுக்கும் தொழில் பிரதிநிதிகளுக்கும் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தகவல் கசிவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.