
கேரளா, டிசம்பர் 9 – சபரிமலை ஐயப்பன் கோவிலில், பம்பையிலிருந்து சன்னிதானம் வரை ரோப் கார் சேவை அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. பக்தர்கள் வசதியாக மேலே செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை விரைவாக கொண்டு செல்லவும் இந்த சேவை உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 2.7 கிலோமீட்டர் நீளமான இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் செலவு சுமார் 150 கோடி முதல் 250 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பம்பா மலை உச்சியிலிருந்து சன்னிதானம் அருகிலுள்ள மாளிகைப்புரம் காவல்துறை குடியிருப்பு வரையிலான பகுதி ரோப் கார் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்டத்திற்குத் தேவையான வனத்துறை நில மாற்றம் தொடர்பான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டு, கள ஆய்வுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரோப் கார் சேவை பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் நேரம் சுமார் 15 நிமிடங்களுக்கு குறைவதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தரிசனம் செய்ய முடியும்.



