
கோலாலம்பூர், செப்டம்பர் 20 – கடந்த ஆண்டு மே மாதம், வாகனம் ஒன்றில் 18 வயது பெண்ணை கற்பழித்த இருவருக்கு, இன்று செஷ்ன்ஸ் நீதிமன்றம் 11 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 பிரம்படிகளை விதித்தது.
லோரி ஓட்டுநரான 27 வயது சத்தியா மற்றும் அவனது நண்பரான 31 வயது கட்டுமான தள மேற்பார்வையாளரான கணேசன் இக்கொடூர குற்றத்தைப் புரிந்துள்ளனர்.
பிப்ரவரியில் தொடங்கிய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட மொத்தம் 14 அரசுத் தரப்பு சாட்சிகளும், ஏழு எதிர் சாட்சிகளும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர்.