
டாமான்சாரா, ஜூன்-24- மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, B40 வர்கத்தினருக்காக முதன் முறையாக ‘ஒன்றாக வளருங்கள்: கழிவுகளிலிருந்து அதிசயம் வரை’ என்ற பெயரில் உரம் தயாரிக்கும் பட்டறையை அண்மையில் ஏற்பாடு செய்தது.
Trustwired Malaysia மற்றும் EcoGarage-ஜின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் இணைந்து அத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பட்டறை 2025 NTW எனப்படும் தேசிய பயிற்சி வாரத்தின் ஒரு பகுதியாகும்; இது நிலையான வாழ்க்கையை ஆதரிப்பதற்கும் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்கேற்பாளர்களை நடைமுறை பசுமைத் திறன்களுடன் பழக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பண்டார் ஸ்ரீ டாமான்சாரா, Flat Sri Cempaka-வில் நடைபெற்ற இந்த அரை நாள் பயிலரங்கு, வாழ்நாள் முழுவதும் கற்றல் நடைமுறைகள் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான HRD Corp மற்றும் அதன் பங்காளிகளின் கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இதில் B40 குழுவைச் சேர்ந்த 100 பங்கேற்பாளர்களுக்கு உரம் தயாரிக்கும் நடைமுறை குறித்த நுட்பங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக வீட்டு உணவுக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய உரமாக எப்படி மாற்றுவது என்பது குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அணுகுமுறையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், பசுமைத் திறன்கள் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சாத்தியமான வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்வில் TVET டாமான்சார ஒருங்கிணைப்பாளர் Dr. Azizul Amar Rahmat அவர்களின் முக்கிய உரையும் இடம்பெற்றது.
HRD Corp-பின் மத்திய மண்டலத்திற்கான தலைவர் கீதா கணேசன் உள்ளிட்டவர்களோடு Flat Cempaka குடியிருப்பாளர்கள், பசுமைத் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.