Latestமலேசியா

காஜாங்கில் மியன்மார் பெண் கொலை; ஐவர் கைது

கோலாலம்பூர் , நவ 7- பண்டார் தெக்னோலேஜி  காஜாங் (Bandar Teknologi Kajang) தொழில்மயப்  பகுதியில் வாடகை  அறையில்  மியன்மார்  பெண் ஒருவரின் கொலைசெய்யப்பட்ட உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து   இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.   28 மற்றும்  45 வயதுடைய  அவர்கள் அனைவரும்  நேற்று   நண்பகல்   1 மணிக்கும்  மாலை  6.30 மணிக்குமிடையே பண்டார் தெக்னோலோஜி மற்றும் Semenyih  வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக   காஜாங் ஓ.சி.பி.டி துணை கமிஷனர்  Naazron  Abdul Yusof தெரிவித்தார். 

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைதான நபர்களில் ஒருவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.    40 வயது பெண் இரத்த வெள்ளத்தோடு மயங்கிய நிலையில்  காணப்படுவதாக  தகவல் தகவல்  கிடைத்ததை தொடர்ந்து   சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பரிசோதனை  நடத்தப்பட்டது. அங்குள்ள மெத்தையில்  சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்த  பெண்ணின் உடலில்  12  கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டதாக   Naazron   தெரிவித்தார்.  கைதான அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்காக   தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!