Latestமலேசியா

ஆயுதப் படையின் தளபதியானார் டத்தோ மொஹமட் நிசாம் ஜஃபார்

கோலாலம்பூர், ஜனவரி-31 – பணியாளர் சேவைகளுக்கான உதவித் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டத்தோ மொஹமட் நிசாம் ஜஃபார், மலேசிய ஆயுதப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக, 4 நட்சத்திர ஜெனரல்களில் ஒருவர் தான் அப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவார்;

இந்நிலையில், முதன் முறையாக 3 நட்சத்திர ஜெனரலாக அப்பொறுப்பை ஏற்று மரபை அவர் முறியடித்துள்ளார்.

பணி ஓய்வுப் பெறும் ஜெனரல் தான் ஸ்ரீ மொஹமட் அப்துல் ரஹ்மானுக்கு பதிலாக, ஆயுதப் படையின் 23-வது தளபதியாக அவர் பொறுப்பேற்றார்.

தற்காப்பு அமைச்சின் கட்டடத்தில், அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் முன்னிலையில் இன்று பதவி ஒப்படைப்பு நடைபெற்றது.

இங்கிலாந்து, Sandhurst அரச இராணுவக் கல்லூரியில் பயிற்சியைப் மேற்கொண்டவரான டத்தோ நிசாம், அனைத்துலக அளவில் பல்வேறு பயிற்சிகளைப் பெற்ற அனுபவசாலியாவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!