
கெமாமன், ஜூன் 3 – கடந்த ஏப்ரல் மாதம், திரங்கானு கெமாமன் சமய பள்ளியைச் சார்ந்த மாணவரொருவர் அனுமதியின்றி ரொட்டி துண்டுகளைச் சாப்பிட்டதால், அவரை அறைந்து காயப்படுத்திய வார்டானுக்கு, நீதிமன்றம் 1,200 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
நீதிபதியின் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட வார்டன், மறுநாள் காலை உணவிற்காக வைத்திருந்த ரொட்டிகளை முதல் நாளே அம்மாணவர் சாப்பிட்டதால், தான் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
அவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.