
காஜாங், செப்டம்பர் 11 – தனது ஆசிரியரை முகத்தில் குத்தியவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 வயது மாணவன், இன்று காஜாங் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளான்.
இந்நிலையில் அம்மாணவனை பிரதிநிதித்த வழக்கறிஞர் இவ்வழக்கை மாணவர் தரப்பினர் எதிர்த்து போராட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அதே வேளை நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்த மாணவனுக்கு நீதிமன்றம் உத்தரவாதத்துடன் கூடிய 1,000 ரிங்கிட் ஜாமின் தொகையை விதித்து விடுதலை செய்தது.
இந்த மாணவன், கடந்த ஜூலை 28ஆம் தேதி காஜாங் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில், வகுப்புகளை தவிர்த்ததற்காக கண்டித்த தனது 29 வயது ஆசிரியரின் முகத்தில் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஓராண்டுவரை சிறைத் தண்டனையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.