Latestமலேசியா

1 மில்லியன் ரிங்கிட் போலி பண கோரிக்கை; நிறுவன உரிமையாளர் கைது

கோலாலம்பூர், மார்ச் 1 – பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அறநிறுவனத்திடமிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட் போலி பணம் கோரியதாக நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரை MACC கைது செய்துள்ளது. 50 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை இன்று முதல் 5 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு ற்கு மாஜிஸ்திரேட் Ellyna Othman அனுமதி வழங்கியுள்ளார். போலி invoice ஸை பயன்படுத்தி ஒரு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பொருட்களை சிலாங்கூர் உள்ள அறநிறுவனத்திடம் கோரிய சந்தேகத்தின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து அந்த ஆடவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஆனல் அந்த சந்தேகப் பேர்வழியின் நிறுவனம் இதுவரை பொருட்கள் எதனையும் விநியோகிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலாங்கூரில் உள்ள MACC அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தபோது நேற்றிரவு 10 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டார். இதனிடையே 2009ஆம் ஆண்டு MACC சட்டத்தின் 18 ஆவது விதியின் கீழ் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் MACC யின் இயக்குனர் Alias Salim உறுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!