Latestமலேசியா

காதல் மோசடி- வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஜோகூரில் இருவர் 500,000 ரிங்கிட் இழந்தனர்

ஜோகூரில் இருவர்  காதல் மோசடி  மற்றும்   வேலை வாங்கித் தருவதாக கூறியவர்களை நம்பி   சுமார்  500,000 ரிங்கிட் இழந்ததாக  ஜோகூர்  மாநில போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர்  M. குமார் தெரிவித்தார்.  இந்த மோசடி திட்டத்தினால் பாதிக்கப்பட்ட இருவர் அண்மையில் வெவ்வேறு போலீஸ் புகார்களை  செய்துள்ளதாக குமார் கூறினார்.  காதல் மோசடி திட்டத்தில   69 வயதுடை ஓய்வு பெற்ற ஆடவர்  ஒரு மாதத்திற்கு முன் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகமான வெளிநாட்டு பெண்ணிடம்  242,620 ரிங்கிட்டை ஏமாந்துள்ளார்.  தாம் வேலை செய்யும் நம்பிக்கையில் மலேசியாவுக்கு வந்திருப்பதாகவும் அதிக அளவில் வெளிநாட்டு தொகையை கொண்டு வந்ததால்,  அதனை தெரிவிக்காததால்  குடிநுழைவு  அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறி   தமது வங்கிக் கணக்கில்  பணத்தை பட்டுவாடா செய்து உதவும்படி அந்த பெண் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு   தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.   இதனை உண்மையென நம்பிய அந்த ஆடவர்  அப்பெண்ணின் வங்கி கணக்கிறகு  பணம் பட்டுவாடா செய்து ஏமாந்துள்ளார் என  குமார் தெரிவித்தார்.

இரண்டாவது சம்பவத்தில்   வேலையில்லாத  57 வயதுடை  ஆடவர்  பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறிய நபரிடம்  252,900 ரிங்கிட்டை ஏமாந்துள்ள தகவலையும் குமார் வெளியிட்டார்.  வாட்ஸ்அப் புலனத்தின் மூலம் அறிமுகமான  ஒருவர் கூடுதல் வருமானம் வரக்கூடிய இணையம்  வாயிலான வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியுள்ளார். அதோடு   Like  என்ற செயலியை அழுத்தும்படி அவர் கூறிய  உத்தரவை பின்பற்றியதால்  தமது வங்கியில் இருந்த 252,900 வெள்ளி சேமிப்பு பணத்தை இழந்துவிட்டதாக அந்த நபர் புகார் செய்துள்ளார் என   DCP குமார் கூறினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!