
கோலாலம்பூர், ஜூன் 16,
தந்தை என்பது நம்மை வழிநடத்தும், நமது தேவைகளுக்காக அயராது உழைக்கும் தெய்வம் என மஇகா தேசிய தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தாய் ஒரு தெய்வம் என்றால், தந்தை இன்னொரு தெய்வம்.
தந்தையர்கள் குடும்ப நலனுக்காக கடுமையாக உழைக்கின்றனர்.
ஆனால் பிள்ளைகள் வழிதவறாமல் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக அவர்களது அன்பை கண்டிப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள்.
இன்று தந்தையரை இழந்தவர்கள் அவர்களது பங்களிப்பை நினைவுகூர வேண்டும்.
தந்தையரை அருகில் வைத்திருப்போர் அவர்களை மகிழ்வுபடுத்தி நன்றி செலுத்த வேண்டும்.
இது ஒரு நாளுக்கான செயல் அல்ல; வாழ்நாள் முழுக்க செய்யவேண்டிய கடமை.
தந்தைகள் தங்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னேற்ற உறுதி கொள்ள வேண்டும்.
அதற்கான வழிகாட்டுதலையும், உதவிகளையும் மஇகா, எம்.ஐ.இ.டி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூலமாக வழங்குவதாக தாம் உறுதியளிப்பதாகவும் அவர் சொன்னார்.
நம் பிள்ளைகள் நல்ல கல்வியுடன் சமூக சீர்கேடுகளைத் தவிர்த்து முன்னேறினால், நம் சமூகமும் வளர்ச்சி அடையும்.
தந்தையராகிய அனைவரும் இந்த இலக்கை நோக்கி பாடுபட வேண்டுவதாக தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்



