
லியூயாங், அக்டோபர்-4,
சீனாவில், பட்டாசுத் தொழிலுக்குப் பெயர்பெற்ற லியூயாங் நகரில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சி, எதிர்பாராத வகையில் பரபரப்பாக மாறியது.
சில ட்ரோன்கள் திடீரென பழுதடைந்து, பார்வையாளர்கள் மீது விழுந்ததால், அது “விண்மீன் மழை” போல காட்சியளித்தது.
இச்சம்பவம் அருகிலுள்ள புல்வெளிகளில் சிறிய தீ விபத்துகளையும் ஏற்படுத்தியது.
எனினும், தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்து தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக, இதுவரை எந்த உயிரிழப்போ, காயமோ பதிவுச் செய்யப்படவில்லை.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ட்ரோன்கள் பழுதடைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
“வானவேடிக்கைகளின் பிறப்பிடம்” என அழைக்கப்படும் லியூயாங், மத நோக்கங்கள் முதல் நவீன பொழுதுபோக்கு வரையிலான கொண்டாட்டங்களுக்கு, உலகின் பெரும் பகுதிகளுக்கு பட்டாசுகளை வழங்குகிறது.