Latestமலேசியா

மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிப்பள்ளியில் ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை

ஷா ஆலம், ஏப்ரல் 18 – வளர்ந்து வரும் இளைய தலைமுறையின் அறிவு திறன்களை மேம்படுத்தும் விதமாக Artifical Intelligence Workshop எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை ஒன்று சிலாங்கூர் மிட்லண்டஸ் பள்ளியில் நடத்தப்பட்டது.

கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட Pusat Latihan Be STEM Ready இயக்கத்தின் தலைமையில், இந்த பயிற்சி பட்டறை 90 மாணவர்களுடன் 15 ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏறக்குறைய நேற்று 5 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த வகுப்பில் Drone, Coding மற்றும் Robotic ஆகியவை மாணவர்களின் மனம் கவரும் வகையில் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல் நுட்பங்களின் முக்கியத்துவம், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவும் போன்றவற்றையும் செய்முறையோடு இப்பட்டறையில் எடுத்துரைக்கப்பட்டதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தசாமி சுப்பிரமணி தெரிவித்தார்.

முதல் கட்டமாக நடத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறை, இனி தொடர் வகுப்புகளாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, இந்த பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் இனி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த போட்டிகளிலும் கலந்து சிறப்பிப்பர் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!