
பெக்கான், செப்டம்பர்-22,
பஹாங், பெக்கானில் ஓராங் அஸ்லி பூர்வக்குடி பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணிபுரியும் 45 வயது ஆடவர், 11 வயது மாணவனை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
செப்டம்பர் 12-ஆம் தேதியன்று கலாச்சார நிகழ்ச்சி முடிந்து விடுதியில் தங்கியபோது, அவ்வாசிரியர் மாணவனை தன் படுக்கைக்கு அழைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மாணவன் தனது தாயிடம் உண்மையை பகிர்ந்தபோதே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து செப்டம்பர் 13-ஆம் தேதியன்று, போலீஸ் சந்தேக நபரின் கைப்பேசியை பறிமுதல் செய்து, ஆபாச வீடியோ மற்றும் படங்கள் உள்ளதா என விசாரித்தது.
அந்நபர் ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.