
கோலாலம்பூர், ஜனவரி-30- கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் கூட்டமாக நின்றிருந்த ஆடவர்கள் மீது 2 வாகனங்கள் கண்மூடித்தனமாக மோதியச் சம்பவம் வைரலாகியுள்ளது.
புதன்கிழமையன்று, அங்குள்ள இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதில் மூவர் காயமடைந்ததாக 24 வயது இளைஞன் புகாரளித்திருப்பதை, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Ku Mashariman Ku Mahmood உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த மூவரில் ஒருவர் அவசர சிகிச்சைக்காக மருத்துமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
இதை ஒரு கொலை முயற்சியாக வகைப்படுத்தி போலீஸ் விசாரித்து வருவதாக Ku Mashariman சொன்னார்.