Latestமலேசியா

“Kingu Ginseng” மிட்டாய் விற்பனை விளம்பரத்தை நீக்கும்படி லசாடாவுக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

கோலாலம்பூர், ஏப் 15 –

இணைய  விற்பனை தளமான Lazada க்கு உடனடியாக விளம்பரங்களின் உள்ளடக்கம் மற்றும்  Tadalafil (தடாலாஃபில்)  கொண்ட மிட்டாய்  பொருட்களின் விற்பனையை நீக்கும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரத் திட்டம்  மூலம் மலேசியாவைச் சேர்ந்த Kingu Ginseng மிட்டாய்  குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக சுகாதார  அமைச்சு  இன்று வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்தது.  சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) வழங்கிய  ஆலோசனையை தொடர்ந்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tadalafil  என்பது விறைப்புத்தன்மை அல்லது ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. Tadalafil  கொண்ட மருந்துகளை ஒரு மருத்துவரால் மட்டுமே வழங்க முடியும் அல்லது மருத்துவரின் பரிந்துரையுடன்  மருந்தகத்தில் இருந்து மட்டுமே  பெற முடியும்  சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தயாரிப்பு label  உணவு ஒழுங்குமுறைகள், 1985 ஆம் ஆண்டின்  லேபிளிங் தேவைகளுக்கு இணங்கவில்லை, அதாவது உற்பத்தியாளர், பேக்கர், விநியோகஸ்தர், உற்பத்தி அல்லது இறக்குமதி செய்யும் உரிமையின் உரிமையாளர் ஆகியோரின் பெயர் மற்றும் முகவரியை கொண்டிருக்கவில்லையென தனது  விசாரணையில் தெரியவந்துள்ளதாக  சுகாதார அமைச்சின் அறிக்கையில்  கண்டறியப்பட்டதாக தெரியவருகிறது. 

மருத்துவரின் மேற்பார்வையின்றி  Tadalafil லை  பயன்படுத்துவதால் பார்வை மற்றும் செவித்திறன் குறைதல் அல்லது  செயல் இழப்பு போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்று சுகாதார அமைச்சு  எச்சரித்துள்ளது. 

கூடுதலாக, இதன் விளைவு இரத்த அழுத்தத்தில் ஆபத்தான நிலைகளுக்கு திடீரென வீழ்ச்சியை ஏற்படுத்தி  பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இருதய விளைவுகளையும் ஏற்படுத்தும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!