Latestஉலகம்

“ஹாமாஸ் எங்கிருந்தாலும் நாங்கள் குறிவைப்போம்”; தென் காஸாவையும் தாக்க இஸ்ரேல் திட்டம்?

காஸா, நவ 18 – இஸ்ரேல் காஸாவின் வடக்கு பகுதியை குறிவைத்து பெரும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், தற்போது ஹாமாஸ் இருக்கும் இடம் எல்லாம் நாங்கள் குறிவைத்து முன்னேறுவோம் என கூறியிருப்பது, காஸாவின் தென்பகுதியையும் அது தாக்கக் கூடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான AL-SHIFA-வை இஸ்ரேல் தரப்பு சுற்றி வளைத்து, மின்சார துண்டிப்பையும் ஏற்படுத்தி இருப்பதால், அந்த மருத்துவமனை செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றது.

அந்த மருத்துவமனையின் அடித்தளத்தின் சுரங்கப் பாதையின் வழி இராணுவ நடவடிக்கை மையமாக ஹாமாஸ் அங்கிருந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருக்கின்றது.

ஆனால் ஹமாஸ் தரப்பு அதனை மறுத்திருக்கின்றது. இந்த இரு தரப்பின் குற்றச்சாட்டின் உண்மையை ஆராய ஐநா அங்கு செல்வதற்கான அனுமதியை வழங்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் அம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த பெரும்பாலான நோயாளிகள் இறந்து விட்டதாக அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதாபமானத்திற்கு எதிராக இஸ்ரேல் செயலபடுவதாக பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ள வேளையில் அமெரிக்காவும் அவசர உதவிகள் அங்கு சென்றடைய இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதன் தொடர்பாக தினமும் ,காஸாவிற்கு இரண்டு எண்ணெய் லோரிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!