
கோலாலம்பூர், நவம்பர் 18 – ‘Genting’ மலேசிய நிறுவனம், ‘Genting Highlands’ செல்லும் பாதையில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசிய பொதுப்பணி துறை அமைச்சான KKR அதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் இன்னும் பெறவில்லை என்று குறிப்பிட்டது.
இன்னும் Genting நிறுவனத்திடமிருந்து எந்த ஆவணங்களும் கிடைக்கப்பெறவில்லையென்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நந்தா லிங்கி (Datuk Seri Alexander Nanta Linggi) கூறினார்.
இந்தக் கட்டணம் ‘Genting Highlands’ கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் விதிக்கப்படுமே தவிர அவ்வழியாக கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆதலால் இதனை ‘டோல்’ என்றழைப்பதைக் காட்டிலும் ‘நுழைவு கட்டணம்’ என்றழைப்பதே சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.
முன்னதாக, Genting Malaysia நிறுவனம் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்க திட்டமிட்டதாக அறிவித்துள்ளது. ஆனால், ‘Genting Highlands’ செல்லும் பாதை பொதுச் சாலை அல்ல என்றும் இது தனியார் நிலத்தில் அமைந்துள்ளது என்றும் KKR தெரிவித்துள்ளது.



