Latestமலேசியா

ஹரி ராயாவுக்கு சபா & சரவாக் மாநிலங்களுக்கு நிலையான கட்டணத்தில் Batik Air விமானச் சேவை

கோலாலம்பூர், மார்ச்-7 – நோன்புப் நெருநாள் பண்டிகை கால பயணத்தை எளிதாக்கும் வகையில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு நிலையான கட்டணங்களை Batik Air விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், சரவாக் விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணங்கள் 319 ரிங்கிட்டாகவும், சபாவுக்கு 379 ரிங்கிட்டாகவும் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

பெருநாள் உச்ச பயணக் காலங்களில் பயணிகளின் தேவைகளைப் பற்றிய விமான நிறுவனத்தின் புரிதலை இந்நடவடிக்கை பிரதிபலிப்பதாக, நேற்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் லோக் கூறினார்.

Batik Air தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சந்திரன் ராம முத்தி, மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ ஶ்ரீ சரிபுடின் காசிம், மலேசிய பொது வான் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் மஹ்முட் மற்றும் மலேசியா விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தலைமை இயக்க அதிகாரி கோர்டன் ஸ்டீவர்ட் ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.

இவ்வேளையில் கோத்தா பாரு, அலோர் ஸ்டார், பினாங்கு, கோத்தா கினாபாலு, கூச்சிங், சிபு, சண்டாகான், தாவாவ் போன்ற முக்கிய உள்நாட்டு இடங்களுக்கு Batik Air விமானங்களின் எண்ணிக்கையை 140 வரை அதிகரிக்கும் என்றும் லோக் அறிவித்தார்.

இக்கூடுதல் பயணச் சேவைகளானது, மேலும் ஏராளமான மலேசியர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி பெருநாளைக் கொண்டாட வழி வகுக்குமென்றார் அவர்.

இதன் வழி இந்த பெருநாள் காலம் நெடுகிலும் 22,000-கும் மேற்பட்ட கூடுதல் இருக்கைகளை Batik Air வழங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!