
பிந்துலு, செப்டம்பர் 1 – நேற்றிரவு பிந்துலு செபாரு சாலை அருகேயுள்ள கால்வாயில் ஒன்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்த அவசர அழைப்பு, பிந்துலு தீயணைப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றவுடனேயே, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் என்று சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (Bomba) செயல்பாட்டு மையம் தகவல் தெரிவித்தது .
சிறுவனின் உடைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் இரண்டு மீட்டர் தொலைவில் அச்சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்விடத்திலேயே சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவ அதிகாரிகள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
சிறுவனின் உடல் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.