
வாஷிங்டன், ஜனவரி 13 – அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடக தளமான Truth Social-ல், தன்னை தென் ஆப்பிரிக்கா Venezuela-வின் இடைக்கால அதிபர் என அறிவித்துள்ளதாக கூறப்படும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தகவல்களின்படி, Venezuela-வின் அதிபர் Nicolas Maduro, அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையே, அதாவது தாம் அந்த நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்தி வருவதாக ட்ரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Truth Social-ல் வெளியிடப்பட்ட அந்தப் பதிவு, விக்கிபீடியா வாழ்க்கை வரலாறு போன்ற தோற்றத்தில் மாற்றியமைக்கப்பட்டதாகவும், அதில் ட்ரம்ப் 2026 ஜனவரி முதல் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவர் அமெரிக்க அதிபர் பதவியையும் தொடர்ந்து வகிப்பதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெனிசுவேலாவின் சட்டபூர்வ இடைக்கால அதிபராக Delcy Rodriguez இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.



