Latestமலேசியா

பேருந்து தடத்தை வழிமறித்தது தொடர்பில் 4 நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்

கோலா சிலாங்கூர், ஜூலை 9 – ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்துக்கான தடத்தை வழிமறித்த சம்பவம் தொடர்பில் நான்கு தனிப்பட்ட நபர்களிடம் விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர்களில் மூன்று சைக்கிளோட்டிகளும் ஒரு பேருந்து ஓட்டுநரும் அடங்குவர் என கோலா சிலாஙகூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாருடின் தாஜூடின்
( Azarudin Tajudin ) தெரிவித்தார். அந்த சைக்கிளோட்ட கும்பலைச் சேர்ந்த 24 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவர் நேற்று மாலை மணி 3.29 அளவில் கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
புகார் செய்தார்.

விசாரணை அதிகாரியுடன் தொடர்புகொண்ட பின் அவர் தாமாகவே போலீஸ் நிலையத்திற்கு வந்தார் . அதே வேளையில் இச்சம்பவம்
தொடர்பில் பேருந்து ஓட்டுநரும் போலீசில் புகார் செய்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அஷாருடின் கூறினார். ஜாலான் கோலா சிலாங்கூர் – கோலாலம்பூர் சாலையின் 23 ஆவது கிலோமீட்டரில் பத்து ஆராங் எச்சரிக்கை விளக்கை தாண்டிய பின் சுங்கை பூலோவுக்கு செல்லும் வழியில் இச்சம்பவம் நடந்ததாக இதற்கு முன்பு ஊடகங்களில் தகவல் வெளியாகியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!