
கோலாலம்பூர், டிசம்பர்-10, பதின்ம வயது மாற்றுத்திறனாளி பெண்ணைக் கற்பழித்தது மற்றும் இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட குற்றங்களுக்காக, ஒரு பாதுகாவலருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தனது பராமரிப்பில் விடப்பட்டிருந்த அப்பெண்ணைக் கடந்த மாதம் கற்பழித்ததாக 2 குற்றச்சாட்டுகளும் இயற்கைக்கு மாறான உறவுக்கு உட்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டும் 27 வயது Rafiee Abdullah மீது சுமத்தப்பட்டிருந்தன.
மூன்றையும் அவன் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறையும் 3 பிரம்படிகளும் விதித்த நீதிபதி, அவற்றை கைதான தேதியான டிசம்பர் 3 தொடங்கி அடுத்தடுத்து அனுபவிக்க உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் யாரையும் நியமிக்காத குற்றவாளி, தமக்குக் குறைந்த தண்டனையை வழங்குமாறும், அதுவும் ஏக காலத்தில் அனுபவிக்க அனுமதிக்குமாறும் முன்னதாக நீதிபதியிடம் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
முதலிரண்டு குற்றங்களை பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் கூச்சாய் லாமாவிலும், செராசிலும் புரிந்த வேளை, மூன்றாவது குற்றத்தை பிரிக்ஃபீல்ட்ஸ், தாமான் கெம்பிராவிலும் புரிந்துள்ளார்
பாதிக்கப்பட்ட பெண், ADHD எனப்படும் நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு கொண்டவர் ஆவார்.