கோலாலம்பூர், டிச 30 – Teh O Ice lychee பானத்தை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதற்காக 15 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து பெரும் அதிருப்தி மற்றும் கோபம் அடைந்துள்ளார். TikTok பயனர் @nhrnxy08 என்ற பயணர் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அந்த பானத்தின் விலை 8 ரிங்கிட்டை விட அதிகமாக இருக்காது என்றும் கூடிய பட்சம் அதன் விலை 8 ரிங்கிட்டாக இருக்கும் என்றே எதிர்பார்த்ததாகவும் இறுதியில் விலையைக் கண்டு அதிர்ந்துவிட்டேன் என அவர் தெரிவித்தார். இது அதிகப்பட்சமானது என அந்த டிக்டோக் படத்தின் தலைப்பில் அவர் பதிவிட்டார். இரண்டாவது படத்தில், அவர் தனது பானத்திற்கான ரசீதையும் பகிர்ந்து கொண்டார். அதன் விலை 15 ரிங்கிட்டைக் காட்டியது.
இந்த இடுகை குறித்து பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அந்த விலைக்கு, நாங்கள் மற்ற இடங்களில் மூன்று முதல் நான்கு பொருட்களைப் பெறலாம் என @liza.amir.84 என்ற பயணர் கருத்துரைத்தார். இந்த தே ஓ ஐஸ் லைச்சி பானம் பண்ணையில் இருந்து தயாரிக்கப்பட்டது. அதனால்தான் அதன் விலை அதிகமாக இருக்கிறது என @idgafthh1, என்ற பயணர் கிண்டல் செய்துள்ளார். பல பயனர்கள் வாடிக்கையாளரை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சில் முறையான புகார் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவ்வாறு செய்வதன் மூலம், இந்த விவகாரத்தை அமைச்சு முறையாக விசாரிக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.